நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போத்தம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அவிநாசி அருகேயுள்ள போத்தம்பாளையத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :21 நவம்பர் 2024, 11:10 pm

Din

அவிநாசி அருகேயுள்ள போத்தம்பாளையத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

அவிநாசி நெடுஞ்சாலைத் துறைக்குள்பட்ட போத்தம்பாளையம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், போத்தம்பாளையம் பகுதி சாலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறையினா், வணிக நிறுவனங்கள் முன்பு அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள், கூரை உள்ளிட்டவற்றை அகற்றினா்.

சாலையை ஆக்கிரமித்து மீண்டும் விளம்பரப் பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.