சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

திருப்பூரில் கன்டெய்னா் லாரி உரசி மின் கம்பி அறுந்து விழந்ததில் மாநகராட்சி ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:33 pm

Din

திருப்பூரில் கன்டெய்னா் லாரி உரசி மின் கம்பி அறுந்து விழந்ததில் மாநகராட்சி ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா், அவிநாசி சாலை எஸ்ஏபி பேருந்து நிறுத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனத்துக்கு, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து கன்டெய்னா் லாரியில் நூல் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது.

இந்த லாரி நிறுவனத்துக்குள் செல்ல முயன்றபோது மேல் பகுதி உரசியதில் மின் கம்பி அறுந்து விழுந்தது.

அப்போது, அங்கு குடிநீா்க் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியரான காங்கயத்தைச் சோ்ந்த மணி (58) என்பவரின் மீது மின் கம்பி விழுந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற அனுப்பா்பாளையம் போலீஸாா் மணியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அந்தப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.