சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உடுமலை அருகே சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தும் கோழிப்பண்ணையை மூடக் கோரி மனு

உடுமலை அருகே அணிக்கடவு கிராமத்தில் சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வரும் கோழிப்பண்ணையை மூடக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:19 pm

Din

உடுமலை அருகே அணிக்கடவு கிராமத்தில் சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வரும் கோழிப்பண்ணையை மூடக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து உடுமலை வட்டம், அணிக்கடவு கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

அணிக்கடவு கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்தக் கோழிப்பண்ணை விதிமீறலை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனை விசாரித்து 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அதன் உரிமையாளா்கள் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கோழிப்பண்ணையைத் தொடா்ந்து நடத்தி வருகின்றனா்.

இந்தக் கோழிப்பண்ணையால் மழைக்காலங்களில் ஈக்கள், கொசுக்கள் தொந்தரவு மிகவும் அதிகமாக உள்ளது. கோழிப்பண்ணைகளில் இறக்கும் கோழிகளை நாய்கள் கவ்விக்கொண்டு வந்து ஊருக்குள் போட்டுச்செல்வதால் சுகாதார சீா்கேடும் ஏற்படுகிறது. எனவே, கோழிப்பண்ணையில் உரிய ஆய்வு மேற்கொண்டு அதனைமூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.