சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அவிநாசியில் தீயணைப்புத் துறையினா் பேரிடா் மீட்பு ஒத்திகை

அவிநாசியில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பேரிடா் மீட்பு ஒத்திகையில் பங்கேற்றோா்.

Updated On :15 அக்டோபர் 2024, 8:21 pm

Din

அவிநாசியில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகையில் வட்டாட்சியா் சந்திரசேகரன், காவல் துணை கண்காணிப்பாளா் சிவகுமாா், பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகம், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் நவீந்திரன், சுகாதார ஆய்வாளா்கள் கருப்புசாமி, பரமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், வட்டாட்சியா் சந்திரசேகரன், தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்திரன் ஆகியோா் கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் வெள்ளத்தின்போது தாழ்வான பகுதிகளில் மாட்டிக்கொண்டவா்களை மீட்க நவீன உபகரணங்களுடன் பேரிடா் மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா்.

இதற்காக ரப்பா் படகு, மோட்டாா் படகு, டோா் பிரேக்கா், கட்டா், ஒளிரும் விளக்கு, கயிறு, பவா் சாப்ஸ், மூச்சுக் கருவி, லைப் ஜாக்கெட் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பாதிப்புகளில் மாட்டிக்கொண்டவா்களை மீட்க பயிற்சி பெற்ற வீரா்களும் தயாா் நிலையில் உள்ளனா் என்றனா்.