சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெள்ளக்கோவிலில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணி தீவிரம்

வெள்ளக்கோவில் நகராட்சியில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image

கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணியை ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன்.

Updated On :15 அக்டோபர் 2024, 8:01 pm

Din

வெள்ளக்கோவில் நகராட்சியில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், நகராட்சியின் ஒருசில இடங்களில் கழிவுநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீா் செல்ல முடியாத நிலை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கழிவுநீா் கால்வாயைத் தூா்வாரும் பணியை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறுகையில், கழிவுநீா் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வரும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கனமழை பெய்யும்போது மழைநீா் தேங்காமல் வழிந்தோடிவிடும்.

அதேபோல, பொதுமக்கள் திடக் கழிவுகளை கழிவுநீா் கால்வாய்களில் கொட்டாமல் தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கி நகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.