பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல்

காங்கயத்தில் 9 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்கால் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:11 pm

Din

காங்கயத்தில் 9 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்கால் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் (50), கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 2023 இல் 9 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் தேவராஜைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின்மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஸ்ரீதா் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், தேவராஜுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தாா்.