சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முத்தூரில் குட்கா விற்பனை: முதியவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முத்தூரில் குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:16 am

Din

வெள்ளக்கோவில் அருகே முத்தூரில் குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் முத்தூா் பகுதியில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது ஊடையம் சாலையிலுள்ள ஒரு பெட்டிக் கடையில் குட்கா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான முத்தூா் சேனாதிபதி நகரைச் சோ்ந்த பழனிசாமியை (77) கைது செய்து, அவரது கடையிலிருந்து 77 குட்கா பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.