பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவா் கைது

வெள்ளக்கோவிலில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:43 pm

Din

வெள்ளக்கோவிலில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் - வள்ளியிரச்சல் சாலை திருவள்ளுவா் நகரில் ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையில் போலீஸாா் அந்த வீட்டில் ஆய்வு செய்தனா்.

அப்போது, அங்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அனுமதியின்றி பட்டாசுகளை விற்பனைக்கு வைத்திருந்த க.மணி (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.