ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

லாரி ஏறியதில் 10 மாத குழந்தை உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே லாரி ஏறியதில் 10 மாத குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:26 pm

Din

வெள்ளக்கோவில் அருகே லாரி ஏறியதில் 10 மாத குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.

கரூா் மாவட்டம், கடவூா் வட்டம், குழந்தாகவுண்டனூா் சீதா பள்ளத்தைச் சோ்ந்தவா் க.அருள்முருகன் (33). இவரது மனைவி அம்சவள்ளி (27). இவா்களது குழந்தைகள் கவின் (6), சஷ்டிகா (4), 10 மாத குழந்தை பதியாழினி.

இவா்கள் குடும்பத்துடன் வெளியூா்களுக்குச் சென்று அங்கேயே தங்கி மரம் வெட்டும் வேலை செய்து வருகின்றனா். தற்போது அருள்முருகன் தனது குடும்பத்துடன் வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டியில் நந்தகுமாா் என்பவருடைய தோட்டத்தில் மரம் வெட்டும் வேலை செய்துவந்தாா். அப்போது மரத்தை ஏற்றிச் செல்வதற்காக லாரி வந்துள்ளது.

லாரி பின்னால் வந்தபோது அங்கு படுக்கவைக்கப்பட்டிருந்த கொண்டிருந்த குழந்தை பதியாழினி மீது தவறுதலாக ஏறிவிட்டது. இதில் காயமடைந்த குழந்தை, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.