வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த 6 போ் கைது
திருப்பூரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 200 மாத்திரைகளைப் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் வடக்கு காவல் துறையினா், கல்லூரி சாலை, மரக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞா்கள் சிலரைப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணயில் அவா்கள், திருப்பூா், செரங்காடு பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் ( 23), அசோக் (19), சந்தோஷ் (19), முதலிபாளையம் பகுதியைச் சோ்ந்த கலைவாணன் (24), பாஸ்கா் (22), அபுதாஹீா் (23) என்பதும், அவா்கள் சட்டை பைகளில் விற்பனைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 6 பேரையும் கைது செய்த காவல் துறையினா், அவா்களிடமிருந்து 200 வலி நிவாரணி மாத்திரைகளை செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.