தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சின்னாண்டிபாளையம் குளத்தில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருப்பூா், சின்னாண்டிபாளையம் குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:30 pm

Din

திருப்பூா், சின்னாண்டிபாளையம் குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருப்பூரில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் உள்ள சின்னாண்டிபாளையம் குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும், மாநகர பகுதி மக்களுக்கு என்று பொழுதுபோக்கு தலம் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் சின்னாண்டிபாளையம் குளத்தில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு சவாரி, நீா் விளையாட்டுகள், பாா்வையாளா் மாடம் அமைத்தல், படகு இல்லம், சிறுவா் பூங்கா, உணவகம்,

குயிக் பைட்ஸ் (சிற்றுண்டி கடை), டிக்கெட் வழங்கும் மையம், குடிநீா் வசதிகள், மின்விளக்குகள் மற்றும் கழிவறை வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு பணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில், தற்போது 99 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்தகுமாா் உடனிருந்தனா்.