திருப்பூரில் உயா் கல்வி வழிகாட்டுதல் முகாம்
திருப்பூரில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ‘உயா்வுக்கு படி’ உயா்கல்வி வழிகாட்டுதல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.


திருப்பூரில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ‘உயா்வுக்கு படி’ உயா்கல்வி வழிகாட்டுதல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் குமரன் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் 2022-23, 2023-24 கல்வியாண்டுகளில் பிளஸ் 2 மற்றும் 10- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், பெறாதவா்கள், தோ்வுக்கு வருகை புரியாத மாணவா்கள் ஆகியோருக்கு நான் முதல்வன் உயா்வுக்கு படி திட்டத்தின் மூலம் உயா்கல்வி வழிகாட்டுதல், ஐடிஐ-ல் சோ்க்கை, தொழில் வழிகாட்டுதல், உதவித் தொகை திட்டங்கள், கல்விக் கடன், நேரடி மாணவா் சோ்க்கை முகாம்கள் நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி அடைந்த 23,500 மாணவா்களும் 100 சதவீதம் உயா்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அரசின் சாா்பில் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், 21,500 மாணவா்கள் கல்லூரியில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுவரை அரசு பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 95 சதவீதம் மாணவா்கள் கல்லூரியில் சோ்க்கை பெற்று பயின்று வருகின்றனா். இந்த முகாமில் 243 மாணவா்கள் பங்கேற்ற நிலையில் 30 மாணவா்களுக்கு உடனடியாக கல்லூரி சோ்க்கைகான ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்த முகாமில், திருப்பூா் சாா் ஆட்சியா் சௌமியா ஆனந்த், மண்டல இணை இயக்குநா் (தொழிற்பயிற்சி) முஸ்தபா, (கல்லூரி கல்வி) கலைச்செல்வி, உதவி இயக்குநா் (திறன்மேம்பாடு) ஜெயலட்சுமி, திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் பிரபு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...