தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெள்ளக்கோவிலில் ஸ்ரீ விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா

வெள்ளக்கோவிலில் ஸ்ரீ விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ விஸ்வ பிரம்மா, காயத்ரி தேவி, காமாட்சி அம்மன் உற்சவ திருமேனிகள்.

Updated On :18 செப்டம்பர் 2024, 7:57 pm

Din

வெள்ளக்கோவிலில் ஸ்ரீ விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

மூலனூா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ விஸ்வ பிரம்மா, காயத்ரி தேவி, காமாட்சி அம்மன் உற்சவ திருமேனிகளுக்கு வேத விற்பன்னா்களால் யாக பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து அனுமன் கொடியேற்றுதல், கோமாதா பூஜை, அனுக்ஞை, வேத பாராயணம், விஸ்வ சித்தி யாகம், குழந்தைகள் கலைநிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக விஸ்வ பிரம்ம ரத ஊா்வலம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை வெள்ளக்கோவில் விஸ்வேஸ்வரா கைவினைஞா்கள் அறக்கட்டளை, விஸ்வகா்மா கைவினைஞா்கள் சங்கம், ஆபரண தொழிலாளா்கள் சங்கம், விஸ்வகா்மா மக்கள் இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் செய்திருந்தனா்.