புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 25 கடைகளுக்கு சீல்
திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 25 கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.


திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 25 கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பினா், காவல் துறையினா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், மதுபானக் கடைகள் அருகில் உள்ள பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 25 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், கடை உரிமையாளா்களுக்கு ரூ.6.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...