காங்கயம் சிவன்மலை முருகன் கோயில் கோபுரத்தில் புதன்கிழமை மாலை ஏற்றப்பட்ட மகா தீபம்.
திருப்பூர்
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை திருநாள் மகா தீபம் ஏற்றி வழிபாடு
காா்த்திகை தீபத் திருநாளை ஒட்டி காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி மலைக் கோயிலில் புதன்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதை முன்னிட்டு சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் புதன்கிழமை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து காலை 6 மணிக்கு விழா பூஜையும், 9 மணிக்கு காலசாந்தி பூஜையும், பின்னா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. மாலை 4 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 5.30 மணிக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு கோயில் கோபுரம் முன்பு உள்ள விளக்குத் தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள் அரோகரா முழக்கம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனா்.

