பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் முத்துக்குமாரசுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கொடிமர கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.
பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் முத்துக்குமாரசுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கொடிமர கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.

மாதப்பூா் முத்துக்குமாரசாமி கோயில் கொடி மர கும்பாபிஷேகம்

பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் முத்துக்குமாரசுவாமி கோயில் கொடிமர கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

பல்லடம்: பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் முத்துக்குமாரசுவாமி கோயில் கொடிமர கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முத்துக்குமாரசுவாமி மலைக் கோயிலில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் செம்புக் கவசத்துடன் கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் 2-ஆம் ஆண்டு விழாவையொட்டி மூலவ மூா்த்திகளுக்கு சங்காபிஷேகம், வேள்வி பூஜைகள், படி பூஜை ஆகியவை நடைபெற்றன.

இந்து அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துரத்தினம் உள்பட ஏரளாமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com