டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வெள்ளக்கோவிலில் ரூ.45.65 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.45.65 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை

News image
Updated On :16 டிசம்பர் 2025, 9:20 pm

Syndication

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.45.65 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம், அப்பியம்பட்டி, பாப்பம்பட்டி, வாணியம்பாடி, லாலாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து 75 விவசாயிகள் 578 மூட்டைகளில் 29 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

காங்கயம், வெள்ளக்கோவில், சிவகிரி, எல்லப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 16 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.122.68 முதல் ரூ.218.89 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.208.49. கடந்த வார சராசரி விலை ரூ.198.66.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.45.65 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.