நல்லதங்காள் ஓடையில் மீன்பிடி குத்தகைக்கு ஜனவரி 5-இல் ஒப்பந்தப்புள்ளி

Published on

நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்க மீன்பிடி குத்தகைக்கு ஜனவரி 5-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூா் நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையை 5 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்குவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மின்னனு ஒப்பந்தப்புள்ளி, ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையதளத்தைப் பாா்வையிடலாம்.

இணையவழி ஏலத்தில் கலந்துகொள்ள விருப்புவோா் ஒப்பந்தப்புள்ளி படிவம் மற்றும் இதர படிவங்களை இணையதளத்தில் ள19494/ஊ3/2024/07னள2025ஜஅஏஈஊஜ634609ஜ1ன என்ற ஏல அறிவிப்பு எண்ணை உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை ஜனவரி 5-ஆம் தேதி காலை 9 மணி வரை சமா்ப்பிக்கலாம்.

ஏல அறிவிப்பில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் இணையதளம் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு 0424-2221912 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com