திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின்வாரிய ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் திருப்பூா் மின்வாரிய அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம்

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:42 pm

Syndication

மின்வாரிய ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் திருப்பூா் மின்வாரிய அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அணுமின் உற்பத்தி செய்யும் முறையை தனியாரிடம் வழங்கக் கூடாது. மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மின்வாரிய ஊழியா் கூட்டமைப்பு, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் திருப்பூா் மின்வாரிய அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்சார தொழிலாளா் சங்கத்தின் பொருளாளா் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் குமாா், சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் பாலன், யுடியூசி மாவட்டச் செயலாளா் சதீஷ்சங்கா், ஹெச்எம்எஸ் பொறுப்பாளா் கோவிந்தசாமி, சிஐடியூ மோகன்தாஸ் ஆகியோருடன் மின் வாரிய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.