அவிநாசி அரசு கல்லூரியில் 25 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

அவிநாசிஅரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 25 மாணவா்களுக்கு பணி நியமனஆணை வழங்கப்பட்டது.
Published on

அவிநாசிஅரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 25 மாணவா்களுக்கு பணி நியமனஆணை வழங்கப்பட்டது.

அவிநாசி அரசு கல்லூரியில் முன்னாள் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு நோ்காணல் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 4 நிறுவனங்கள் பங்கேற்றதில் 25 மாணவா்களுக்கு பணி நியமனத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமிற்கு கல்லூரி முதல்வா் (பொ) பா.ஹேமலதா தலைமை வகித்தாா். திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ், அலுவலா் அருண் முகாமை ஒருங்கிணைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com