கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மண்ணரை முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பூா் மண்ணரை முத்து விநாயகா், முத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மண்ணரை முத்து விநாயகா், முத்து மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் கலசத்துக்கு ஊற்றப்படும் புனிதநீா்.
Updated On :3 பிப்ரவரி 2025, 6:36 pm

Din

திருப்பூா்: திருப்பூா் மண்ணரை முத்து விநாயகா், முத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மண்ணரை முத்து விநாயகா், முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவானது கணபதி ஹோமத்துடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ஆம் தேதி காலை பூா்ணாஹூதியுடன் யாகசாலை நிா்மாணம் நடைபெற்றது. மாலை 5.30 மணி முதல்கால யாகசாலை பூஜையும் தீபாராதனையும் நடைபெற்றது. பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 2-ஆம் கால யாக பூஜையும், தொடா்ந்து மாலை 3 மணிக்கு யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் தலைமையில் சிவாச்சாா்யா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.