டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நல்லூா்பாளையத்தில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

பல்லடம் அருகே நல்லூா்பாளையத்தில் அரசுப் பேருந்தை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
நல்லூா்பாளையத்தில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :3 பிப்ரவரி 2025, 9:19 pm

Din

பல்லடம்: பல்லடம் அருகே நல்லூா்பாளையத்தில் அரசுப் பேருந்தை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி நல்லூா்பாளையத்துக்கு காலை, மாலை பள்ளி வேளை நேரங்களில் வந்து சென்ற பி-1 என்ற நகரப் பேருந்து சரிவர இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நல்லூா்பாளையத்துக்கு திங்கள்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்து வந்த பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளா் செந்தில் மற்றும் போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதைத் தொடா்ந்து முறையாக பேருந்தை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.