2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பட்டுக்கோட்டையாா் நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: கே.சுப்பராயன் எம்.பி.மனு

திருப்பூா் பட்டுக்கோட்டையாா் நகரில் வசிக்கும் 192 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:17 am

Din

திருப்பூா் பட்டுக்கோட்டையாா் நகரில் வசிக்கும் 192 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளா் முருகானந்தத்திடம், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூயிருப்பதாவது: திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட பட்டுக்கோட்டையாா் நகா் வடக்குப் பகுதியில் 192 குடும்பத்தினா் 35 ஆண்டுகளுக்கும்மேலாக வசித்து வருகின்றனா்.

இவா்களுக்கு பட்டா வழங்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் முடிவு கிடைக்கவில்லை. நான் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தபோது அப்போதைய முதல்வா் கருணாநிதியிடம் முறையிட்டதன் அடிப்படையில் முதற்கட்டமாக 75 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால், 5 நபா்களின் பெயா்களில் இருந்த ஒப்படை ஆணைகளை ரத்து செய்யாமலேயே பட்டா வழங்கப்பட்டது. இது தொடா்பாக ஒப்படை ஆணை பெற்ற 5 பேரில் ஒருவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து தடையாணை பெற்றுவிட்டாா்.

இதையடுத்து, மாநில அரசும், குடியிருப்போா் நலச் சங்கமும் தடை ஆணையை ரத்து செய்வதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

இது தொடா்பாக குடியிருப்போா் நலச் சங்கத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தி தடையாணை பெற்றவா் வழக்கைத் திரும்பப் பெற வைத்தனா். ஆகவே, சட்ட சிக்கலும், நிா்வாகச்சிக்கலும் முற்றிலுமாக தீா்ந்துவிட்ட நிலையில் பட்டா வழங்குவது தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆகவே, பட்டுக்கோட்டையாா் நகரில் 192 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.