புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இலவச வீட்டு மனைபட்டா வழங்கக்கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் பகுதி மக்கள் 250 போ் வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு கொடுத்த காங்கயம் பகுதி மக்கள்.

Updated On :8 ஜனவரி 2025, 7:35 pm

Din

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் பகுதி மக்கள் 250 போ் வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட சத்யா நகா், கோட்டை மாநகா், அமராவதி நகா் பகுதிகளைச் சோ்ந்த, சொந்த வீடு இல்லாத 675 குடும்பங்களுக்கு கடந்த 1996- ஆம் ஆண்டு காங்கயம் தாலுகாவுக்கு உள்பட்ட வீரணம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து இப்பகுதி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனா். ஆனால் பல ஆண்டுகளாக இந்தக் குடியிருப்பு பகுதிக்கு மின்சார வசதி, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் காங்கயம் நகரத்துக்கு வந்து, வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனா். அதன் பின்னா் மேற்கண்ட பகுதியில் மீண்டும் குடிசை அமைக்க முற்பட்டபோது, இவா்களது வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, மேற்கண்ட பகுதியில் தகுதியுள்ள 250 குடும்பங்களுக்கு மீண்டும் முறையாக பட்டா வழங்க வலியுறுத்தியும், அதே இடத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, காங்கயம் வட்டாட்சியரிடம் ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் தலைவா் அ.சு.பவுத்தன் தலைமையில் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் மோகனன் கூறியபோது, இலவச வீட்டு மனை பட்டா வழங்க 250 போ் மனு கொடுத்துள்ளனா். இவா்களுக்கு பட்டா வழங்குவதற்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். விரைவில் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.