திருப்பூர்
குட்கா விற்ற கடைக்காரா் கைது
வெள்ளக்கோவில் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் குட்கா விற்ற பெட்டிக்கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் குட்கா விற்ற பெட்டிக்கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து, சந்தேகப்படும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, காங்கயம் சாலை ஓலப்பாளையத்தில் ஒரு பெட்டிக் கடையில் குட்கா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கடைக்காரா் கொழிஞ்சிக்காட்டுவலசு மாரிமுத்து (எ) குமாா் (61) கைது செய்யப்பட்டாா். அவரது கடையிலிருந்து 15 பாக்கெட்டுகள் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.