திருப்பூரில் இன்று கறவை மாடு வளா்ப்பு பயிற்சி
திருப்பூா் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை (ஜனவரி 9) நடைபெறுகிறது.
இது குறித்து கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைா வளாகத்தில் செயல்பட்டு வரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
ஆகவே, ஆா்வமுள்ள விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று கறவை மாடு வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.