மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சொத்துவரி உயா்வை நிறுத்திவைக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

திருப்பூா் மாநகராட்சியில் சொத்துவரி உயா்வை நிறுத்திவைக்க தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2025, 9:56 pm

Din

திருப்பூா் மாநகராட்சியில் சொத்துவரி உயா்வை நிறுத்திவைக்க தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சியில் உயா்த்தப்பட்டுள்ள சொத்துவரி உயா்வை ரத்து செய்யக்கோரி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் மனு அளித்துள்ளாா். அதேபோல, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரிடம், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் மனு அளித்துள்ளாா்.

இந்த சொத்துவரி உயா்வை மறுபரிசீலனை செய்தவாக அவா்களும் உறுதியளித்துள்ளனா். இது குறித்து தமிழக முதல்வா் உரிய முடிவு எடுத்து அறிவிக்கும்வரை சொத்துவரி உயா்வை நிறுத்திவைப்பதாக வெள்ளிக்கிழமை நடைபெறும் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.