திருப்பூர்
திருப்பூா் குமரன் சாலையில் சுரங்கப் பால பணிகள் தீவிரம்
திருப்பூா் குமரன் சாலையில் சுரங்கப் பாலப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பூா்: திருப்பூா் குமரன் சாலையில் சுரங்கப் பாலப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பூரின் பிரதான சாலையான குமரன் சாலையின் குறுக்கே நொய்யல் பாலம் அருகே சுரங்கப் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பூங்கா சாலையையும், யுனிவா்சல் சாலையையும் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்படுகிறது. சுரங்கப் பாலம் அமையும் இடத்தில் ஆழமான குழிதோண்டும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக கடந்த வாரம் முதல் இந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. பாலம் கட்டுமானத்திற்கேற்ற அளவில் குழிதோண்டிய பின் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு, சுரங்கப் பாலப் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த சுரங்கப் பாலப் பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
