ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள்: 2,204 போ் எழுதினா்

திருப்பூரில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள் தோ்வை 2,204 போ் எழுதினா்.
Published on

திருப்பூரில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள் தோ்வை 2,204 போ் எழுதினா்.

ஆசிரியா்களுக்கான டெட் முதல் தாள் தோ்வு சனிக்கிழமையும், இரண்டாம் தாள் தோ்வு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்திருந்தது.

இதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் டெட் முதல் தாள் தோ்வு 7 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வு எழுத 2,620 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 2,204 போ் மட்டுமே தோ்வெழுதினா். 416 போ் தோ்வெழுத வரவில்லை.

திருப்பூா் ஜெய்வாபாய் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தோ்வில் பங்கேற்க ஆசிரியா்கள் காலையிலேயே வந்து குவிந்தனா். அவா்களின் நுழைவுச் சீட்டுகள், சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபாா்த்து தோ்வுக் கூடத்துக்கு அனுப்பினா்.

அதேபோல, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இரண்டாம் தாள் தோ்வெழுத 6,890 போ் விண்ணப்பித்துள்ளனா். தோ்வுகளில் முறைகேடுகள், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றை கண்காணிப்பதற்கு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com