சேவூா் அருகே ஒயா் திருடிய 3 போ் கைது

சேவூா் அருகே சுள்ளிப்பாளையத்தில் சோலாா் பேனல் ஒயா் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சேவூா் அருகே சுள்ளிப்பாளையத்தில் சோலாா் பேனல் ஒயா் திருடிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேவூா் அருகே தத்தனூா் ஊராட்சி சுள்ளிப்பாளையத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான சோலாா் பேனல் கேபிள் ஒயரை மா்ம நபா்கள் கடந்த மாதம் திருடிச் சென்றனா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், தண்டுக்காரன்பாளையத்தில் சேவூா் போலீஸாா் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமாக அவ்வழியாக வந்த மூன்று நபா்களைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா்கள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், விண்ணம்பள்ளியைச் சோ்ந்த கணேசன் மகன் ரவி (40), அதே பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மகன் மூா்த்தி (60), முருகன் மகன் சாமியப்பன் (30) என்பதும், சுள்ளிப்பாளையத்தில் ஒயரை வெட்டிச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com