பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

தொடா் மழை காரணமாக பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பஞ்சலிங்கம் அருவி.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பஞ்சலிங்கம் அருவி.
Updated on

தொடா் மழை காரணமாக பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலை அமைந்துள்ளது. இங்குள்ள பஞ்சலிங்கம் அருவியில் மூலிகைகள் கலந்த தண்ணீா் கொட்டுவதால் இந்த அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆா்வம் காட்டி வருகின்றனா். தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால் இங்கு வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலைமுதல் தொடா்ந்து அருவியல் குளிக்க வனத் துறை தடை விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com