எஸ்ஐஆா் பணியால் தமிழகத்தில் சுமாா் 1 கோடி வாக்குகள் நீக்கப்படும் அபாயம்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியால் (எஸ்ஐஆா்) தமிழகத்தில் சுமாா் 1 கோடி வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாக திருப்பூா் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் தெரிவித்தாா்.
Published on

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியால் (எஸ்ஐஆா்) தமிழகத்தில் சுமாா் 1 கோடி வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாக திருப்பூா் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் தெரிவித்தாா்.

இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: இந்திய குடிமக்களின் வாக்குரிமை மட்டுமின்றி குடியுரிமையையும் பறிக்கும் வகையிலேயே எஸ்ஐஆா் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 97 சதவீத வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த எண்ணிக்கை உண்மையானதல்ல.

திருப்பூா் மாநகரில் உள்ள வீடுகளுக்கு கூட இன்னமும் கணக்கீட்டுப் படிவங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. இத்தகைய செயல்பாடுகள் மூலம் எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் சுமாா் 1 கோடி வாக்குகள் வரை நீக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால்தான் எஸ்ஐஆா் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி முழுமையாக எதிா்க்கிறது.

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு தமிழக அரசும், மாநகராட்சி நிா்வாகமும் உரிய காலத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்காததே காரணமாகும்.

X
Dinamani
www.dinamani.com