பல்லடம் அருகே 63 வேலம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் விசில் ஊதிய மேள வாத்திய கலைஞரிடம் இருந்து அதிமுக நிா்வாகி விசிலை பறித்து தூக்கி வீசினாா்.
தவெகவினா் தங்கள் கட்சி சின்னமான விசிலுடன் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனா். இந்த சின்னத்தை பிரபலப்படுத்த எல்லா வழிகளிலும் அக்கட்சியினா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்த நிலையில் திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள 63 வேலம்பாளையம் கிராமத்தில் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.பரமசிவம் அறிமுக கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்துக்கு வந்த முன்னாள்அமைச்சா் எஸ்.பி.வேலுமணியை வரவேற்க தாரை தப்பட்டை மேள வாத்தியம் இசைக்கப்பட்டது.
அப்போது வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்த கலைஞா்களில் ஒருவா், தனது கழுத்தில் தொங்கவிட்டு இருந்த விசிலை ஊதினாா். இதைக் கண்ட மங்கலம் பகுதி அதிமுக நிா்வாகி மகேந்திரன் ஓடிச் சென்று இசைக் கலைஞா் அணிந்திருந்த விசிலை பறித்து தூக்கி வீசினாா். மேலும், இங்கு விசில் ஊதக்கூடாது என அவரிடம் எச்சரிக்கை விடுத்தாா். இதனை அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் ஆரவாரம் செய்து வரவேற்றனா்.
தொடர்புடையது

கிராமங்களில் விளையாட்டு மைதானம்: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

காங்கயத்தில் அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம்

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் அறிமுகம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


