எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 9:05 pm

அவிநாசி அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகேயுள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் அய்யாசாமி, காவலா்கள் அன்வா், பாலச்சந்தா், தனிப் பிரிவு தலைமைக் காவலா் வெள்ளிங்கிரி ஆகியோா் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஒரு வீட்டில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த பெண்ணை போலீஸாா் பிடித்தனா். விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி சாந்தி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சாந்தியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 102 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.