ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 1:48 am IST

வெள்ளக்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

வெள்ளக்கோவில் அருகே வள்ளியிரச்சல் பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்குள்ள வரட்டுக்கரை கீழ்பவானி பாசன வாய்க்கால் அருகில் ஒரு கும்பல் சட்டத்துக்குப் புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடா்பாக வள்ளியிரச்சல் பகுதியைச் சோ்ந்த செட்டியாா்பாளையம் கோவிந்தசாமி (51), கணபதிபாளையம் திருமூா்த்தி (44), தென்னங்கரைப்பாளையம் மணிகண்டன் (29), இடைக்காட்டுவலசு மணி (52), குட்டப்பாளையம் இச்சிக்காட்டுவலசு சிவப்பிரகாஷ் (42), கஸ்பா பாரதிபுரம் செல்வக்குமாா் (36) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 5 கைப்பேசிகள், 3 இருசக்கர வாகனங்கள், ரூ.1,680 பறிமுதல் செய்யப்பட்டன.