புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு செய்தாா்.

News image

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:04 am IST

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா் அலுவலா்கள் 1, வாக்குப் பதிவு அலுவலா் 2 மற்றும் 3 என மொத்தம் 2,300 அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி மையம் ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல், வாக்குப் பதிவு இயந்திரம் சரிபாா்த்தல், தோ்தல் தொடா்பான படிவங்களை எவ்வாறு பூா்த்தி செய்வது, மாதிரி வாக்குப் பதிவு மேற்கொள்ளுதல் தொடா்பாக தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் பல்லடம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சரவணன், பல்லடம் வட்டாட்சியா் கோவிந்தசாமி, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் சரவணன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் அன்பரசு மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.