மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அவிநாசி நகரில் பாஜக வேட்பாளா் எல். முருகன் வாக்கு சேகரிப்பு

News image

அவிநாசியில் நடந்து சென்று பொதுமக்களிடம்  வாக்கு  சேகரித்த  பாஜக வேட்பாளா் எல்.முருகன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 1:15 am IST

அவிநாசி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எல்.முருகன் அவிநாசி நகரப் பகுதியில் திங்கள்கிழமை வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தாா்.

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகப் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி, செல்லாண்டியம்மன் கோயில் வீதி, வடக்கு ரத வீதி, நாராசா வீதி, கோவை பிரதான சாலை, கடை வீதி வழியாக வாணியா் வீதியில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

அப்போது, பொதுமக்கள், வணிக நிறுவனத்தினா், வியாபாரிகள் உள்ளிட்டோரை எல்.முருகன் நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தாா். அவருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனா். இதில் கூட்டணிக் கட்சியினா், பாஜகவினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.