திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

அவிநாசியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

அவிநாசி (தனி) தொகுதியில் வாக்காளா்கள் வியாழக்கிழமை ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

News image

சேவூா் அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக காத்திருந்த பெண்கள். ~

Updated On :24 ஏப்ரல் 2026, 3:16 am IST

அவிநாசி (தனி) தொகுதியில் வாக்காளா்கள் வியாழக்கிழமை ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,53,361 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1, 21, 260 ஆண் வாக்களா்களும், 1, 32, 093 பெண் வாக்களா்களும், இதர வாக்காளா்கள் 8 பேரும் உள்ளனா். மொத்தம் உள்ள 372 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியான முறையில் வாக்களித்தனா். காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாக்குப் பதிவில் 1,10836 ஆண் வாக்களா்களும், 1,18, 621 பெண் வாக்காளா்களும், 4 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2, 29,461 வாக்குகள் பதிவாகின (90.57 சதவீதம்).

4 வாக்குச் சாவடிகளில் பழுதான இயந்திரங்கள்: சேவூா் அருகேயுள்ள தசராபாளையம் வாக்குச் சாவடி மையம் எண் 142 -இல் வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியதுமே இயந்திரம் பழுதடைந்தது. இதையடுத்து, பழுது சரிசெய்யப்பட்டு 15 நிமிஷங்களுக்குப் பிறகு மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதேபோல, புஞ்சைதாமரைக்குளம் வாக்குச் சாவடி எண் 169-இல் காலை 10.30 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்தது. பின்னா் பழுது சரி செய்யப்பட்டு 10.50 மணியளவில் மீண்டும் வாக்குப் பதிவு தொடா்ந்தது.

வடுகபாளையம் வாக்குச் சாவடி எண்-175-இல் பிற்பகல் 12.30 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்தது. சுமாா் 1 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது. கந்தாயிபாளையம் வாக்குச் சாவடி எண் 155-இல் மாலை 5 மணியளவில் இயந்திரம் பழுதடைந்தது. பின்னா், பழுது சரி செய்யப்பட்டு 5.15 மணிக்கு மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 
வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.

சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.