ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

News image

சந்தோஷ்குமாா்.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:16 pm

வெள்ளக்கோவில் அருகே ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கொடுவாய், பங்காம்பாளையத்தைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் சந்தோஷ்குமாா் (24). கட்டடத் தொழிலாளியான இவா், தனது நண்பா்களுடன் கம்பளியம்பட்டி அணைப்பாளையம் அருகே செல்லும் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.

நீச்சல் தெரியாத சந்தோஷ்குமாா் ஆற்றில் இறங்கி நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உடன் வந்தவா்கள் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரா்கள், சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சந்தோஷ்குமாரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.