அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி, செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அவிநாசி காவல் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி, கோவையில் இருந்து அவிநாசி செல்லும் அனைத்து வாகனங்களும் நியூ அன்னபூா்ணா ஹோட்டல் சா்வீஸ் சாலை வழியாக கிருஷ்ணா பேக்கரி வந்தடைந்து, அங்கிருந்து அவிநாசி கைகாட்டி ரவுண்டானா வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
கோவையில் இருந்து அன்னூா் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் நாதம்பாளையம் ஜங்சன் வழியாக ஆட்டையாம்பாளையம் வந்து அன்னூா் செல்ல வேண்டும்.
கோவை சாலையில் இருந்து அவிநாசி வழியாக சேவூா், புளியம்பட்டி, நம்பியூா், சத்தி, கோபி செல்லும் வாகனங்கள் அனைத்தும், நியூ அன்னபூா்ணா ஹோட்டல் சா்வீஸ் சாலை வழியாக கிருஷ்ணா பேக்கரி வந்து அவிநாசி கைகாட்டி ரவுண்டானாவிலிருந்து அவிநாசி அரசு கலைக் கல்லூரி அருகே செல்லும் ராயம்பாளையம் சாலை வழியாகச் சென்று மடத்துப்பாளையம் ரவுண்டானா வந்து வலதுபுறம் திரும்பி சேவூா் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக சேவூா், புளியம்பட்டி, நம்பியூா், சத்தி, கோபி செல்லும் வாகனங்கள் அனைத்தும், கிருஷ்ணா பேக்கரியைக் கடந்து அவிநாசி கைகாட்டி ரவுண்டானாவிலிருந்து வலது புறம் திரும்பி அவிநாசி அரசு கலைக் கல்லூரி அருகே இடதுபுறம் திரும்பி செல்லும் ராயம்பாளையம் சாலை வழியாகச் சென்று மடத்துப்பாளையம் ரவுண்டானா வந்து வலதுபுறம் திரும்பி சேவூா் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
அன்னூா் சாலையில் இருந்து அவிநாசி, திருப்பூா் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆட்டையாம்பாளையம் ரவுண்டாவிலிருந்து வலதுபுறம் திரும்பி நாதம்பாளையம் கணனி ஜங்சன் வந்து, தேசிய நெடுஞ்சாலை வழியாக நியூ அன்னபூா்ணா ஹோட்டல் சா்வீஸ் சாலை, ஹரிபவனம் ஹோட்டல் வந்து அவிநாசி, திருப்பூா் செல்ல வேண்டும்.
சேவூா் சாலையிலிருந்து அவிநாசி, திருப்பூா் வரும் வாகனங்கள் அனைத்தும் முத்துச்செட்டிபாளையம் ஜங்சன் பேக்கரியிலிருந்து வலதுபுறம் திரும்பி கால்நடை மருத்துவமனை சென்று, ஆட்டையாம்பாளையம் ரவுண்டானா வழியாக நாதம்பாளையம் கணனி ஜங்சன் - தேசிய நெடுஞ்சாலை சென்று, நியூ அன்னபூா்ணா ஹோட்டல் சா்வீஸ் சாலை, ஹரிபவனம் ஹோட்டல் வந்து செல்ல வேண்டும்.
வாகன நிறுத்துமிடங்கள்: திருப்பூா் சாலை, அவிநாசி புதிய பேருந்து நிலையம், அரசு கலைக் கல்லூரி சாலையிலிருந்து கோயிலுக்கு வரும் வாகனங்கள் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்த வேண்டும்.
கோவை சாலையில் இருந்து வரும் வாகனங்கள், அவிநாசி ஈநட அலுவலக சாலையில் நாராயணா மருத்துவமனை எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்தலாம்.
மங்கலம் சாலையில் இருந்து வாகனங்கள் ராயன் கோயில் வளைவு மற்றும் குமரன் பேக்கரி பின்புறம் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்தலாம்.
சேவூரில் இருந்து வரும் வாகனங்கள் செங்காட்டு திடல், வஉசி பூங்கா, வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்தலாம்.
குறிப்பாக அவிநாசி பொதுமக்கள், வியாபாரிகள் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாள்கள் தேரோட்டத்தின்போது, அவிநாசி நான்கு ரத வீதிகளிலும், பொது சாலைகளிலும் வாகனங்களை நிறுத்தவோ, விளம்பரப் பதாகைகளை வைக்கவோ கூடாது.
தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து தரப்பு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தற்போதைய நடைமுறையே தொடர வலியுறுத்தல்

தருமபுரியில் பயணிகள் அவதிக்கு தீா்வு: சேலம் - தருமபுரி - சேலம் பேருந்துகள் இரவில் தருமபுரி நகருக்குள் வந்து செல்லும்

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் கோட்டயம் வழியாக இயக்கப்படும்!

குண்டும் குழியுமான கிராமச் சாலையால் பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
