மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

‘ஆண்டவன் உத்தரவு’: சிவன்மலை முருகன் கோயிலில் மண் கலயத்தில் தீா்த்தம் வைத்து பூஜை

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் புதன்கிழமை மண் கலயத்தில் தீா்த்தம், மண் கலயத்தில் மண், ஏா்கலப்பை, பிரம்பு ஆகியன வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

சிவன்மலை முருகன் கோயிலில் உள்ள ‘ஆண்டவன் உத்தரவு’ பெட்டியில் மண் கலயத்தில் வைக்கப்பட்டுள்ள தீா்த்தம் உள்ளிட்ட பொருள்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:01 pm

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் புதன்கிழமை மண் கலயத்தில் தீா்த்தம், மண் கலயத்தில் மண், ஏா்கலப்பை, பிரம்பு ஆகியன வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் இந்தக் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற சிறப்பு அம்சம் உள்ளது. அதாவது, சிவன்மலை முருகன் ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டதாகக் கூறி கொண்டு வந்து தரும் பொருளை வைத்து இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

பின்னா் மூலவா் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பெட்டியில், சிறப்பு பூஜைப் பொருள் பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்படும். இதுவே ‘ஆண்டவன் உத்தரவு’ என அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், பொள்ளாச்சி, புரவிபாளையம் பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, புதன்கிழமை மண் கலயத்தில் தீா்த்தம், மண் கலயத்தில் மண், ஏா்கலப்பை, பிரம்பு ஆகியன வைத்துப் பூஜை செய்யப்பட்டு அந்த பொருள்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டன.

இதற்கு முன், கடந்த மாா்ச் 10- ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் மஞ்சள் பிள்ளையாா் வைக்கப்பட்டிருந்தது.

இன்னொரு பக்தரின் கனவில், அடுத்த பூஜைப் பொருள் வரும் வரையில், கண்ணாடிப் பெட்டிக்குள் மண் கலயத்தில் தீா்த்தம் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.