குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

முத்தூரில் ரூ.13.43 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.13.43 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:24 pm IST

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.13.43 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 23,082 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ ரூ.43.65 முதல் ரூ.66.85 வரை விற்பனையானது.

சராசரி விலை ரூ.56.55. விற்பனைத் தொகை ரூ. 4.65 லட்சம். இதேபோல, 137 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கொப்பரை கிலோ ரூ.120.65 முதல் ரூ. 165.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.161.70. விற்பனைத் தொகை ரூ.8.78 லட்சம்.

ஏலத்தில் மொத்தம் 125 விவசாயிகள், 18 வியாபாரிகள் கலந்துகொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.13.43 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் து.சங்கீதா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.