நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

முத்தூரில் ரூ. 7.76 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.76 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2026, 12:35 am IST

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.76 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 22,754 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 8,675 கிலோ. தேங்காய் கிலோ ரூ.40.15 முதல் ரூ.61.90 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.54.10. விற்பனைத் தொகை ரூ.4.40 லட்சம்.

இதேபோல, 81 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கொப்பரை கிலோ ரூ.120.05 முதல் ரூ.155.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.150.20. விற்பனைத் தொகை ரூ.3.36 லட்சம்.

ஏலத்தில் மொத்தம் 102 விவசாயிகள், 15 வியாபாரிகள் கலந்துகொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.7.76 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் து.சங்கீதா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.