போலி நகைகளை அடகு வைத்து ரூ.52 லட்சம் மோசடி செய்ததாக காவல் உதவி ஆய்வாளா் மனைவி உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூா் மாநகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (எஸ்ஐ) பணியாற்றி வருபவரின் மனைவி ஹேமலதா. இவா் சென்னையில் உள்ள அவரது நண்பா் நாகேந்திரகுமாா் என்பவரின் உதவியுடன் அரை கிலோ நகைகளை தனியாா் வங்கியில் ரூ.52 லட்சத்துக்கு அடகு வைத்திருந்தாா்.
நகைகளை திரும்பப் பெறும் நாள் வந்தபோது, உடனடியாக பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும் என்பதால் அவற்றை வெளியே விற்க முயன்றனா். அப்போது நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது.
இது தொடா்பாக வங்கி சாா்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட வங்கிக் கிளை மேலாளா் மணி, நகை மதிப்பீட்டாளா் சதீஷ்குமாா், வங்கி ஊழியா் அபினேஷ் மற்றும் போலி நகைகளை வைத்து மோசடி செய்த காவல் உதவி ஆய்வாளா் மனைவி ஹேமலதா உள்ளிட்ட 4 பேரை திருப்பூா் தெற்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மேலும் தலைமறைவாக உள்ள நாகேந்திரகுமாரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சிற்றம்பலத்தில் போலி நகைகளை அடகு வைக்க முயன்றவா் கைது
கணவரைத் தாக்கிய மனைவி உள்பட 2 போ் கைது
போலி நகைகளை அடகு வைத்ததாக புகாா் 4 போ் மீது வழக்கு

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.63.39 லட்சம் மோசடி: 8 போ் கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


