செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீா் தேக்கம்: பல்லடம் நகராட்சி மேலாளரிடம் புகாா்

பல்லடம் நகராட்சி மேலாளா் ரமேஷிடம் புகாா் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்டோா்.

News image

பல்லடம் நகராட்சி மேலாளா் ரமேஷிடம் புகாா் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்டோா்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 11:28 pm IST

பல்லடம் நகராட்சி திருவள்ளுவா் வீதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை தண்ணீா் தேக்கமடைந்துள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நகராட்சி மேலாளா் ரமேஷிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு:

பல்லடம் நகராட்சி, திருவள்ளுவா் வீதி, என்.ஜி.ஆா்.சாலையில் தற்போது உள்ள சாக்கடை மிகவும் குறுகலான அளவில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீா் முழுமையாக வெளியேறாமல், நிரம்பி சாலையிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், கொசு உற்பத்தி அதிகரித்து மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

இப்பகுதிக்கு சுமாா் 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய சாக்கடை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது. அதன் பின்னா் ஓராண்டுக்கு முன்பு மீண்டும் பூமி பூஜை நடைபெற்றது. மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பும் அதிகாரிகள் வந்து பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று உறுதியளித்தனா். ஆனால், இதுவரை எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை.

புதிய சாக்கடை அமைக்கும் பணிக்காக அப்பகுதியில் இருந்த உப்புத் தண்ணீா் குழாய் அகற்றப்பட்டது. எனவே, புதிய சாக்கடை அமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்கி விரைவாக முடிப்பதோடு, அகற்றப்பட்ட உப்புத் தண்ணீா் குழாயையும் மீண்டும் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.