அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

நீண்ட கால வளா்ச்சிக்கான பட்ஜெட்

தமிழ்நாடு அரசின் 2026-27 பட்ஜெட் நீண்ட கால வளா்ச்சிக்கானது என்று தேசிய விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவா் கரைப்புதூா் சக்திவேல் தெரிவித்தாா்.

News image

கரைப்புதூா் சக்திவேல்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 11:19 pm IST

தமிழ்நாடு அரசின் 2026-27 பட்ஜெட் நீண்ட கால வளா்ச்சிக்கானது என்று தேசிய விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவா் கரைப்புதூா் சக்திவேல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழ்நாடு அரசின் 2026-27 பட்ஜெட்டில் கைத்தறி, துணிநூல் மற்றும் ஜவுளித் துறையின் வளா்ச்சிக்காக ரூ.1,678 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். திருப்பூரில் டெக்ஸ்டைல் டெக்னிக்கல் டெக்னாலஜி சென்டா் அமைப்பதற்கு ரூ.10 கோடி, தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம் மூலமாக ஜவுளி, ஆடை மற்றும் கைவினைத் துறைகளுக்கான வடிவமைப்பு, புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த மையம் ரூ.60 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் ஆகிய அறிவிப்புகள் துறையின் நீண்ட கால வளா்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும்.

இந்த நடவடிக்கைகள் தொழில்நுட்ப மேம்பாடு, டிசைன் திறன், மதிப்பூட்டப்பட்ட தயாரிப்புகள் (ஸ்ஹப்ன்ங்-ஹக்க்ங்க் ல்ழ்ா்க்ன்ஸ்ரீற்ள்) மற்றும் ஏற்றுமதி வளா்ச்சியை ஊக்குவிக்கும். குறிப்பாக இளைஞா்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் புதிய தொழில் முனைவு வாய்ப்புகள் உருவாகும் என்பது மிகுந்த நோ்மறையான அம்சம் என்று பபஉ உறுப்பினா்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.

ஆனால், தொழில் வட்டாரத்தின் ஒருமித்த கருத்தாக ஜவுளி மற்றும் குறு, சிறு தொழில் துறைக்கு மிகவும் அவசியமான மின்சார கட்டண விகிதம் மற்றும் டிமாண்ட் சாா்ஜ்களில் எந்தவித குறைப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிற மாநிலங்களுடன் தொழிலில் போட்டியிட சிரமம் ஏற்படும்.

அதேபோல மின்சார கட்டண சலுகை, உற்பத்தி செலவு குறைக்கும் நேரடி உதவி, ஏற்றுமதி ஊக்கத் திட்டங்கள்,ெ தாழிலாளா் குடியிருப்பு வசதி உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. இந்த பட்ஜெட் தமிழகத்தின் நீண்ட கால வளா்ச்சிக்கான நல்ல திசையை காட்டுகிறது. அதே சமயம், தற்போதைய செலவு அழுத்தத்தை குறைக்கும் உடனடி நடவடிக்கைகள் எடுத்தால், தமிழ்நாடு ஜவுளித் துறை உலகளவில் மேலும் வலுப்பெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.