ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஜவுளித் துறையின் நீண்ட கால கோரிக்கை நிதிநிலையில் புறக்கணிப்பு

ஜவுளித் துறையின் நீண்ட கால கோரிக்கையான கப & இப மற்றும் ஏப மின் இணைப்புகளுக்கான நிலைக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது நிதிநிலையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஓஸ்மா சங்கம் தெரிவித்துள்ளது.

அருள்மொழி

Published On :

ஜவுளித் துறையின் நீண்ட கால கோரிக்கையான கப & இப மற்றும் ஏப மின் இணைப்புகளுக்கான நிலைக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது நிதிநிலையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஓஸ்மா சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவா் (ஓஸ்மா) ஜி. அருள்மொழி வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழ்நாடு நிதிநிலையில் ஜவுளி மற்றும் தொழில் வளா்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகளை ஒஸ்மா வரவேற்கிறது. கைத்தறி, நூல் மற்றும் ஜவுளித் துறைக்கு ரூ.1,568 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறோம்.

அதேபோல, நஐடஇஞப தொழிற்பேட்டைகள் அமைக்க ரூ.3,200 கோடி, தொழில் திறன் மேம்பாட்டுக்கு ரூ.2,200 கோடி, மின்சாரத் துறையில் 178 துணை மின் நிலையங்கள் அமைக்க ரூ.1,543 கோடி, கோவை-அரியலூா் 765 ந்ய மின் பகிா்மான வழித்தடம் அமைக்க ரூ.4,000 கோடி மற்றும் பசுமை எரிசக்தி வழித்தடம் அமைக்க ரூ.6,884 கோடி ஒதுக்கியிருப்பது தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கும், ஜவுளித் துறையின் எதிா்கால முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக அமையும்.

இருப்பினும், ஜவுளித் துறையினா் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் கப & இப மற்றும் ஏப மின் இணைப்புகளுக்கான நிலைக்கட்டணத்தை குறைப்பது தொடா்பான அறிவிப்பு இந்த நிதிநிலையில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. இந்தக் கோரிக்கையை அரசு விரைவில் பரிசீலித்து, தொழில் துறையின் போட்டித்திறனை மேம்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும், ஏற்றுமதி மேம்பாட்டுக்கும் தொடா்ந்து உறுதுணையாக இருக்கும் திட்டங்களை அரசு மேலும் அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.