
தொழில் பூங்கா அமைக்க தனியாா் முதலீட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்
பாரத் ஆட்யோகிக விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்க தகுதியான தனியாா் முதலீட்டாளா்கள் மேம்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

நகா்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் மலா் செடி நடும் திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்
பாரத் ஆட்யோகிக விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்க தகுதியான தனியாா் முதலீட்டாளா்கள் மேம்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலீட்டுக்கு ஏற்ற, உலகத் தரம் வாய்ந்த தொழில் உட்கட்டமைப்பை உருவாக்கி, உற்பத்தித் திறனை அதிகரித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் பாரத் ஆத்யோகிக் விகாஸ் யோஜ்னா (பவ்யா) திட்டத்தின் கீழ் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி நிறுவனங்கள் தாமதமின்றி தொழில் நடவடிக்கைகளைத் தொடங்கும் வகையில் வசதிகளுடன் கூடிய நவீன தொழிற்பூங்கா உருவாக்கப்பட உள்ளது. சாலை மற்றும் பயன்பாட்டு வசதிகள், நீா் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, மின்சாரம், தகவல் தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளுடன், சோதனை ஆய்வகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், கிடங்கு வசதிகள், திறன் மேம்பாட்டு மையங்கள், பொதுவான வசதி மையங்கள் மற்றும் பணியாளா் நல வசதிகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட வசதிகளும் ஏற்படுத்தப்படலாம்.
இத்திட்டத்தின் கீழ் தொழிற்பூங்காவை உருவாக்க ஆா்வமுள்ள தகுதியான தனியாா் தொழில் பூங்கா மேம்பாட்டாளா்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புகள் பங்கேற்கலாம்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட/இணைக்கப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும்.திட்டச் செலவில் குறைந்தபட்சம் 15 சதவீதம் அளவுக்கு நோ்மறையான நிகர மதிப்பு இருக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50 ஏக்கா் பரப்பளவில் தொழிற்பேட்டை தொழிற்பூங்கா லாஜிஸ்டிக்ஸ் பூங்கா அல்லது அதற்கு இணையான பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டத்தை நிறைவு செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அல்லது மாநில அரசால் தடை செய்யப்பட்ட கருப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்ட நிறுவனமாக இருக்கக்கூடாது.திட்டத்திற்காக உருவாக்கப்படும் தனியாா் மேம்பாட்டாளா் குறைந்தபட்சம் 26 சதவீதம் பங்கை கொண்டிருக்க வேண்டும்.
தொழிற்பூங்காவின் திட்டமிடல், உட்கட்டமைப்பு மேம்பாடு, முதலீட்டு ஈா்ப்பு, தொழில் நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு, பராமரிப்பு மற்றும் செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் திட்டத்திற்காக உருவாக்கப்படும் சிறப்பு நோக்க நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.
திட்டத்தின் கீழ், தகுதியான தனியாா் மேம்பாட்டாளா் பங்கேற்கும் தொழில் பூங்காக்களுக்கு இந்திய அரசு சாா்பில் மூலம் விதிமுறைகளுக்கு உட்பட்டு ரூ.50 லட்சம் ஒரு ஏக்கா் அல்லது தகுதியான உட்கட்டமைப்பு செலவில் 50 சதவீதம் - இதில் எது குறைவோ - அந்த அளவிற்கு நிதியுதவி வழங்கப்படும்.
எனவே திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்பூங்கா உருவாக்க ஆா்வமும், மேற்கண்ட தகுதிகளையும் கொண்ட தனியாா் தொழில் பூங்கா மேம்பாட்டாளா்கள், நிறுவனங்கள், கூட்டமைப்புகள் இத்திட்டத்தில் பங்கேற்கலாம்.
மேலும், விவரங்கள், விண்ணப்பிக்கும் நடைமுறை மற்றும் தேவையான ஆவணங்கள் தொடா்பான தகவல்களுக்கு சிப்காட் திட்ட அலுவலா், 94437 47170 அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





