
மெலோடி! இத்தாலியின் நீண்ட கால பிரதமர் மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இத்தாலியின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்து வரும் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது குறித்து...
இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி - கோப்புப் படம்
இத்தாலியின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்து வரும் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இத்தாலியின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி பெற்றுள்ளார். இதனையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து கூறியிருப்பதாவது, இத்தாலியின் போருக்குப் பிந்தைய வரலாற்றில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றும் பெருமையைப் பெற்றுள்ள எனது நண்பரான பிரதமர் மெலோனிக்கு வாழ்த்துகள்.
இந்த மைல்கல், அவரது தலைமையின்கீழ் இத்தாலி மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் ஆதரவையும் வெளிக்காட்டுகிறது. இந்தியா - இத்தாலி இடையிலான உறவை வலுப்படுத்துவதில் அவரது நட்பு முக்கிய பங்காற்றியுள்ளது.
இரு நாட்டு மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க, தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். வரும் ஆண்டுகளில் அவர் தொடர்ந்து வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் பிரதமராக மெலோனி (49), 2022 அக்டோபர் 22-ல் பதவியேற்றார். இன்றுடன் (செப். 4) 1,414 பிரதமராக தொடர்ச்சியாகப் பதவி வகித்து வரும் மெலோனி, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இத்தாலியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகிப்பவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், அவர்தான் இத்தாலியின் முதல் பெண் பிரதமரும்கூட.
இவருக்கும் பிரதமர் மோடிக்கு இடையில் நீண்ட கால நட்புறவு இருந்து வருகிறது. இருவரின் நட்பையும் மெலோனி + மோடி = மெலோடி என்றும் பிரியமாக அழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Summary
PM Modi congratulates Giorgia Meloni on becoming Italy’s longest-serving Prime Minister
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




