நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ரீல்ஸ்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டும் பிரதமர் மோடி: தேஜஸ்வி யாதவ் பேச்சு

ரீல்ஸ்களை உருவாக்குவதில் பிரதமர் மோடி தீவிரம் காட்டி வருகிறார் என தேஜஸ்வி யாதவ் பேசியது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடி, தேஜஸ்வி யாதவ் - கோப்புப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 9:29 pm IST

ரீல்ஸ்களை உருவாக்குவதில் பிரதமர் மோடி தீவிரம் காட்டி வருகிறார் என ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் புதன்கிழமை (செப். 2) பேசினார்.

பிகாரில் போட்டித் தேர்வுகளில் குளறுபடி, வினாத்தாள் கசிவு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:

இளைஞர்கள் ஏற்கெனவே இந்த அரசாங்கத்திற்கு எதிராக உள்ளனர். முடிவெடுக்கும் மற்றும் கொள்கை வகுக்கும் செயல்பாடுகளில் இளைஞர்கள் சுதந்திரமாகப் பங்கேற்றால், அதைவிடச் சிறந்தது வேறு என்ன இருக்க முடியும்? அதைத்தான் நாம் அனைவரும் விரும்புகிறோம். பிகார் மிக இளமையான மாநிலமாகும், அதன் மக்கள் தொகையில் 60 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர்.

எனவே, கட்சியில் ஆட்களைச் சேர்க்கும்போது ஒவ்வொரு முடிவும் கவனமாக எடுக்கப்படுகிறது. இப்போது, ​​மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது, அந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறுவதை காண்கிறோம். ஆனால் இன்றும்கூட, இந்தியாவின் தனிநபர் வருமானம் பூட்டான் மற்றும் சில அண்டை நாடுகளை விடக் குறைவாக இருக்கிறது. ரீல்ஸ்களை உருவாக்குவதில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் அவர் யதார்த்தத்தைப் பார்க்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

Summary

RJD leader Tejashwi Yadav said on Wednesday (Sept. 2) that Prime Minister Modi is showing keen interest in creating Reels.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.